நடராஜன் ஹரன் / 2017 நவம்பர் 22 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக முறையில் மணல் ஏற்றிச் சென்ற நபர்கள் இருவர், நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்த உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களாக இப்பிரதேசங்களில் அனுமதிபத்திரம் இன்றி மணல் ஏற்றி வருதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இக்கைது இடம்பெற்றுள்ளது.
இந்த கைது நடவடிக்கையை, களுவாஞசிகுடி விசேட அதிரடிப்படையினரும் வெல்லாவெளி பொலிஸாரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களையும் உழவு இயந்திரங்கள் இரண்டையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
14 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
42 minute ago
2 hours ago