Princiya Dixci / 2021 ஜூன் 03 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன், எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓமனியாமடு ஆற்றில் குழுவொன்று, சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட நிலையில் 14 பேர், நேற்று (04) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், அங்கிருந்த ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர் எனவும் 8 உழவு இயந்திரங்களும் 6 கனரக ரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே, மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை, நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், அதையும் மீறி மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
29 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
9 hours ago