Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூலை 08 , பி.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
மர ஆலையில் சட்டவிரோத மரக்குற்றிகளை அரிந்த ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள், அரியப்பட்ட பலகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு – ஏறாவூர், மிச்நகர் பிரதேசத்தில் அமைந்துள்ள இம்மர ஆலை நடைபெறவுள்ள எதிர்வரும் பொதுத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்குச் சொந்தமானதென தெரியவந்துள்ளதாக புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளை வாகனமொன்றில் ஏற்றி, ஆலையில் தரித்து வைத்திருத்தமை, சட்டவிரோதமாக பெறப்பட்ட மரக்குற்றிகளை ஆலையில் அரிந்தமை ஆகிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட இவர்கள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து, தலா இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன், ஓகஸ்ட் 24ஆம் திகதியன்று நீதிமன்றில் ஆஜராகுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.
புல்லுமலை வட்டார வன காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றை, இம்மர ஆலை முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி பிரனீத் சுரவீர தலைமையில் மேலதிக அதிகாரி எம்.ஏ. அஜித்குரே, வட்டார அதிகாரி என். செல்வநாயகம், மேலதிக அதிகாரிபி எம்.எம்.ஆர்.ஜயசுந்தர, சுதீப் மஞ்சுள ஆகியோர் இம்முற்றுகை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இம்மரக்குற்றிகள் தொப்பிகல பகுதியை அண்மித்த அரசாங்க காட்டில் வெட்டப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago