Suganthini Ratnam / 2017 ஜனவரி 11 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சமூக மட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் சமூக ஆர்வலர்கள் 22 பேரைக் கொண்ட சமூக மட்ட விழிப்புணர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவு உத்தியோகஸ்தர் கனகசபை சுதர்சன் தெரிவித்தார்.
நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான மாணிக்கவாசகர் கணேசராஜாவின்; கரிசனையால் இந்த விழிப்புணர்வுக்குழு கடந்த வெள்ளிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வுக் குழுவானது சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை நெறிப்படுத்தி, அவர்களை குடும்ப, சமூக, நாட்டுப் பொறுப்புள்ளவர்களாக மாற்றும் வகையில் செயற்படும்.
சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவு, சிறுவர் நன்னடத்தைப் பிரிவு, சட்ட உதவி ஆணைக்குழு, பெண்கள் அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழு, மத்தியஸ்தசபைத் தவிசாளர்கள், கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மாவட்ட உத்தியோகஸ்தர், கிராம மற்றும் அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் அபிவிருத்தி மாவட்ட உத்தியோகஸ்தர்கள், சமூக நல தன்னார்வத் தொண்டு நிறுவனப்; பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டதாகச் செயற்படும் எனவும் அவர் கூறினார்.
24 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
3 hours ago