2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மணல் கடத்தல்: மூவர் கைது

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா. கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையிலும் மண் கொண்டுசெல்லப்பட்ட வாகனங்களை களுவாஞ்சிகுடிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வெல்லாவெளி பகுதியில் இருந்து மண் ஏற்றிவந்த ட்ரக்டர் ஒன்றை, இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பட்டிருப்பு பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இந்த ட்ரக்டரைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேபோன்று, அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறிய வகையில் மண் கொண்டுசென்ற இரண்டு கன்டர் வாகனங்களை, வீதிப்பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார், நேற்று சனிக்கிழமை (08) கைப்பற்றியதாகக் களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றும் இன்றும், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மூவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் களுவாஞ்சிகுடிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X