Gavitha / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹூஸைன்
ஏறாவூர் பகுதியில், சட்டவிரோத மர அரிவு ஆலைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி வேப்ப மரக்குற்றிகளை சனிக்கிழமை (10) அன்று கைப்பற்றியதாக தெரிவித்த ஏறாவூர் பொலிஸார் அதனை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரங்கள் கடத்தப்படுவதாக, பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, குறித்தத் தொகை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன.
வாகனமொன்றில் ஏற்றப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 மரக்குற்றிகள் ஒவ்வொன்றும் சுமார் 10 அடி நீளமுடையவை என்றும் ஏறாவூர் காயர் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரையே இதன்போது கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago