2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சட்டவிரோத வலைகள் கைப்பற்றல்

Suganthini Ratnam   / 2016 மே 13 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை இரவு முதல் இன்று வெள்ளிக்கிழமை காலை வரை மேற்கொண்ட சோதனையின்போது,  சட்டவிரோத மீன்பிடி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு வாவியின் நாவலடி முதல் புதூர், வீச்சுக்கல்முனை, வலையிறவு வரையான பிரதேசங்களின் மேற்கொண்டபோதே சட்டவிரோத மீன்பிடி வலைகளை கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது சுமார் 3 இலட்சம் பெறுமதியான நாய் வலை, தொட்டாந்தி வலை, தங்கூசி வலை, சிறிய நெத்தலி வலை என்பவற்றை கைப்பற்றியதாக மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் ருக்ஷான் குருஸ் தெரிவித்தார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வலைகளை எதிர்வரும் திங்கட்கிழமை (16) மட்டக்களப்பு  நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X