Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்கும் நோக்கிலும் அங்கு வசிக்கின்ற மக்களின் சனத்தொகை வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் வகையிலும், மட்டக்களப்பு மாநகர சபையால் மூன்றாவது பிள்ளைக்கான சத்துணவுக் கூப்பன்கள் வழங்கி வைக்கப்படுவதாக, அம்மாநகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அந்த நோக்கங்களின் அடிப்படையில், மூன்றாவதாகப் பிறந்த சுமார் 125 குழந்தைகளின் சார்பில் தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவுக் கூப்பன்கள் வழங்கும் நிகழ்வு, மாநகர மேயர் தியாகராசா சரவணபவன் தலைமையில், மாநகர மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்றது.
இந்தக் கொடுப்பனவுகளை வழங்கப் பங்களிப்புச் செய்த அரசசார்பற்ற நிறுவனங்கள் முக்கியமாக சத்துணா நிறுவனத்துக்கும் கனடாவைச் சேர்ந்த விமலநாதனுக்கும் மேயர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே. சித்திரவேல், பிரதி ஆணையாளர் யூ. சிவராஜா, மாநகர சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பயனாளிகளும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago