Suganthini Ratnam / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரி காத்தான்குடியிலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினார்.
காத்தான்குடி சிவில் சமூக செயற்பாட்டாளரான ஏ.எல்.ஸியாத் பஹ்மியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போது இலங்கையில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் முஸ்லிம்கள் தொடர்பான பரிந்துரைகள் மற்றும் வடக்கு, கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்;வு போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இணைவதை ஒரு போதும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிந்தே இருக்க வேண்டும். அதன் மூலமே இன ஐக்கியமும் சகோதரத்துவமும் ஏற்படும்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 36 வீதம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதன் மூலம் முஸ்லிம் 17வீதமாக குறைக்கப்படுவார்கள். இது முஸ்லிம்களுக்கு பெரிய ஆபத்தாகும். எனவே முஸ்லிம்கள் வடக்கு கிழக்கு இணைவதை ஒரு போதும் விரும்பவில்லை.
இலங்கையில் முஸ்லிம்கள் தனி இனமாகும். முஸ்லிம்கள் தேசிய இனம் முஸ்லிம்கள் தனி இனம் என்பதால்தான் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம்கள் மீது இனச்சுத்திகரிப்பும் இடம்பெற்றது.
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பணம் அனுப்பப்படுவது பள்ளிவாயல்கள் கட்டுவதற்காக அதேபோன்று இங்குள்ள வறிய மக்களின் வாழ்வதாரம் மற்றும் குடி நீர் வழங்கள் போன்றவைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்தப்பணம் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள முஸ்லிம்களின் சக்காத் பணமாகும். இந்தப்பணத்தையே இங்கு அனுப்புகின்றனர்.
இதில் சந்தேகம் கொள்வதற்கு எதுவும் கிடையாது முஸ்லிம்கள் மிகவும் நிதானமாகவும் பொறுமையாகவும் நடந்து கொள்கின்றனர் என சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்ததாக காத்தான்குடி சிவில் சமூக செயற்பாட்டாளரான காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர் பொறியியலாளர் எம்.ஏ.தௌபீக் தெரிவித்தார்.
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025