2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சபை அமர்வுக்கும் குழுக் கூட்டத்துக்கும் திகதி அறிவிப்பு

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபை அமர்வு மற்றும் அம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆகியன இடம்பெறும் தினங்கள் பற்றி, அதிகாரிகளால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாநகர சபையின் 5ஆவது சபை அமர்வு, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில், மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில், நாளை மறுநாள் (14) காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் தலைமையில், மட்டக்களப்பு மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 18ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில், மாவட்டத்தில் நடைபெறவுள்ள திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X