Princiya Dixci / 2016 மே 04 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
சர்வமதத் தலைவர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்களுக்கு பல்துறை போஷாக்கு சம்பந்தப்பட்ட விடயங்களில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (03) மட்டக்களப்பு, சத்துருகொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
மதத்தலைவர்களும் சமூகநல ஆர்வலர்களும், மக்களோடு மிக நெருங்கியருப்பதால் அவர்கள் மூலமாக சுகாதாரம் மற்றும் போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தின் மத்தியில் இலகுவாக ஏற்படுத்தி, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதனால் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
யுனிசெப் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாய் - சேய் நல வைத்திய அதிகாரி எம். அச்சுதன், பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர் எம். திருக்குமார் மற்றும் குழந்தை நல வைத்திய நிபுணர், விஜயகுமாரி திருக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு போஷாக்கு சம்பந்தப்பட்ட விளக்கங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து அழைக்கப்பட்டிருந்த மதத் தலைவர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் சுமார் 50 பேர் பங்குபற்றினர்.
56 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
5 hours ago