2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சமூகப் பராமரிப்பு நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2016 மே 06 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஐந்து மில்லியன் ரூபாய்; செலவில் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் சமூகப் பராமரிப்பு நிலையம்; இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது முதியோர் சங்கங்களுக்கு சக்கரக்கதிரைகள், முதியோர் பராமரிப்பு நிலையங்களுக்கு பாவனைப் பொருட்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளோருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே.கிருஷ்ணபிள்ளை, கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. கருணாகரன், சமூக செவைகள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என். மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X