Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சமூகத்தை நேசிக்கும் சமூக சேவையாளர்களுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்; முன்னுரிமை வழங்கப்படுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'யுத்தத்தின் பின்னர் உள்ளூராட்சிமன்றங்களின் பயன்பாடுகள், மாகாணசபைகளின் அதிகாரப் பயன்பாடுகள் தொடர்பில் மக்களுக்கும் மற்றைய அரசியல்; தலைவர்களுக்கும் தெளிவுபடுத்தியவர்கள் நாங்கள்.
மாகாணசபையினூடாக தமிழர்களின் அரசியல் அதிகார இருப்பை தக்கவைத்துக்கொண்டு, அடுத்த கட்ட அரசியல் அதிகாரத்தை நோக்கிப் பயணிப்பது எவ்வாறு என்பதை நடைமுறைச்;சாத்தியமாக 2008-2012வரை நடத்திக்காட்டிய பின்னரே, மாகாணசபை முறைமை வேண்டாமென்று 2008 இல் தேர்தலையே பகிஷ்கரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் 2012 இல் தேர்தலில் களமிறங்கியது.
கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டபோதிலும், அரசியல் சாணக்கியமின்மையால் த.தே.கூ. மாகாணசபையைக் கைப்பற்;றக்கூடிய வாய்ப்பிருந்தும் கைப்பற்றவில்லை. ஆனால், 07 ஆசனங்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் உட்பட ஆட்சி அதிகாரத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னகப்படுத்தியது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் உள்ளுராட்சிமன்றங்களை பொறுப்பேற்ற த.ம.வி.பு. கட்சி மக்களின்; ஆணையுடன் வீதிகள் அமைப்பது முதல் மயானங்களை பதிவு செய்வதுவரை உள்ளூராட்சியின் நிர்வாகச் செயற்பாடுகளை நிறைவேற்றியிருந்தது. பிரதேசத்தையும் சமூகத்தையும் நேசிக்கும் துடிப்புள்ள இளம் தலைவர்களுக்கு த.ம.வி.பு. கட்சி இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னுரிமை அளிக்கவுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago