Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
சமுர்த்திக் கொடுப்பனவுகள் மக்களுக்கான கொடுப்பனவுகளாகும். இந்தக் கொடுப்பனவுகளை துரிதமாக வழங்குவதற்கு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், இந்தக் கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியானவர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் கிடைக்கவில்லையாயின், அதற்கு உரிய அதிகாரிகளே பொறுப்பாவார்கள் என வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்ணம் தெரிவித்தார்.
சமுர்த்திப் பயனாளிகளுக்கான மரணக் கொடுப்பனவாக 15,000 ரூபாயும் பிரசவம் மற்றும் திருமணக் கொடுப்பனவாக 7,500 ரூபாயும் வழங்கப்படுகிறது.
அதேவேளை, சமுர்த்திப் பயனாளிக் குடும்பங்களில் குடும்பத் தலைவர் அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தால், 7 நாட்கள் அல்லது அதற்கு மேலுள்ள நாட்களில் ஒரு மாதகாலம் வரையான கொடுப்பனவாக நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்தக் கொடுப்பனவுக்காக வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வெளியேறிய ஒருவார காலத்துக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுடனான சந்திப்பு, புதிய காத்தான்குடி வாழ்வின் எழுச்சி சமுதாய அபிவிருத்தி வங்கிச் சங்கக் கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'சமூக காப்புரித்துக் கொடுப்பனவை காலம் தாழ்த்தாது வழங்கவேண்டும்.
இந்நிலையில், சமுர்த்திப் பயனாளி ஒருவர் மரணடைந்தால், அவரின் சடலம் நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது தகனம் செய்வதற்கோ முன்னராக மரணக்; கொடுப்பனவானது அப்பயனாளியின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டுவிட வேண்டும்.
இது இவ்வாறிருக்க, பிரசவத்துக்கான கொடுப்பனவானதும் சமுர்த்திப் பயனாளிக் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவியான கர்ப்பிணி, பிரசவத்துக்காக வைத்தியசாலைக்;குச் செல்லும்போது வழங்கப்பட்டுவிட வேண்டும்' என்றார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago