2025 மே 06, செவ்வாய்க்கிழமை

’சர்வதேச நீதியாலேயே முடியும்’

வா.கிருஸ்ணா   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நீதியின் மூலமே பொறுப்புக்கூறலையோ உண்மையைக்கண்டறிதலையோ இந்த மண்ணில் ஏற்படுத்தமுடியும் என, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் கடந்த ஆண்டு வெளியான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இன்று நடைபெற்றது.

அமரர் அலையப்போடி ஞாபகார்த்தமாக வருடாந்தம் அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தால் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் கீழ் கடந்த ஆண்டு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

அறிவாலயம் அறக்கட்டளை நம்பிக்கை நிதியத்தின் தலைவர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுமார் 90 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

தற்போதைய ஆட்சிக்காலத்தில் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன என்றும் கடந்த 2015 தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் நாங்கள் சோதனைகளுக்குட்படுவது மிகவும் குறைவாக இருந்தது என்றும் கூறினார்.

இன்று வடகிழக்கில் பல இடங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் இன்னும் பல செயற்பாடுகள் வரவிருக்கின்றன என்றும் தெரிவித்தார்.

முன்பு சிவில் பகுதிகளுக்கு இராணுவத்தை நியமிக்கும் நிலைமைகள் இருக்கவில்லை என்றும் தற்போது உயர் நிலைகளில் உள்ள சிவில் பகுதிகளிலுக்கெல்லாம் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றார்கள் என்றும் ஜனாதிபதியின் ஆட்சியில் இவை வந்துவிட்டன இன்னும் பல செயற்பாடுகள் வரலாம் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X