2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சர்பத் கடைகளுக்கு கிராக்கி

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எப்.முபாரக்

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் கடுமையான வெப்பநிலை காரணமாக சர்பத்துக்கு நல்ல கிராக்கி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பெருமளவில் சர்பத்துக் கடைகளை நாடிச்செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இதன் காரணமாக சர்பத்து விற்பனை அதிகரித்துள்ளதாகவும் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் சர்பத்துக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடுமையான வெப்பம் நிலவுவதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்தவேண்டும் என்பதுடன், இவ்வாறான சர்பத்துகள் மற்றும் பழச்சாறுகள் அருந்துவது சிறந்தது என களுவாஞ்சிகுடியின் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அதிகரித்து செல்லும் வெப்பத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் உடல்நிலையை தயார்படுத்தலுக்காக இவ்வாறான பாணங்களை அருந்துவது சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சர்பத்துகளில் அங்கிகரிக்கப்பட்ட நிறக்கலவைகள் மட்டுமே பயன்படுத்துவதன் காரணமாக பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X