Janu / 2026 மார்ச் 05 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதி, தனது ஒன்றைவிட்ட சகோதரியின் மகளான 14 வயது சிறுமியை, 55 வயதுடைய நபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர், விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் குறித்த நபர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டார்.
இதனையடுத்து, அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு ம் நீதிபதி உத்தரவிட்டு
தீர்ப்பளித்தார்.
கனகராசா சரவணன்
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago