Janu / 2026 ஜனவரி 21 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் 14 வயது சிறுவனிடம் பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் மாமனார் செவ்வாய்க்கிழமை (20) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் தாய் தந்தை பிரிந்து வாழ்ந்து வருவதுடன் தந்தையார் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குறித்த சிறுவன் உட்பட அவரது சகோதரர்கள் மாமா வீட்டிற்கு சென்று தந்தையாருடன் தொலைபேசியில் பேசி வருவதாக தெரியவந்துள்ளது.
மேலும் அவர்களுக்கு மாதாந்தம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை மாமனார் ஊடாக தந்தை அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் கடந்த டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் மாமனார் சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டு பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார். பின்னர் மீண்டும் கடந்த 27 ஆம் திகதி மாமனார் வீட்டுக்கு சென்ற சிறுவனிடம் பாலியல் சேஷ்டை செய்ய முயற்சித்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த சிறுவன் தனது தாயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் கடந்த 30 ஆம் திகதி 1990 என்ற அவசர சேவைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த சிறுவனிடம் முறைப்பாட்டை பதிவு செய்து அவரை வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த மாமனார் தலைமறைவாகியுள்ளதுடன் அவரை தேடி வந்த பொலிஸார் செவ்வாய்க்கிழமை (20) அன்று அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கனகராசா சரவணன்
9 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
28 minute ago
1 hours ago
2 hours ago