Princiya Dixci / 2016 நவம்பர் 05 , மு.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-பேரின்பராஜா சபேஷ்
மட்டக்களப்பு, சவுக்கடிப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள், நேற்று வெள்ளிக்கிழமை (04) மாலை, மைலம்பாவெளி முகாம் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டன.
சவுக்கடிப் பகுதியில் மரமுந்திரிகைத் தேட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, உரப்பபை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டுகள் 4, வெற்று மகசீன்கள் 2, ரீ56 ரக துப்பாக்கி ரவைகள் 4, சயனட் குப்பி மற்றும் அடையாளத்தகடு ஆகியன மீட்கப்பட்டன.
குறித்த வெடிபொருட்கள் அசாதாரண சூழலின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்கப்பட்ட ஆயுதங்கள், குறித்த பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச் செய்யப்பட்டன.
.jpg)
.jpg)
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
3 hours ago
3 hours ago