2025 மே 15, வியாழக்கிழமை

சாதனைப் படைத்த பொலிஸாருக்கு சேவைதிறன் பாராட்டு விழா

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 நவம்பர் 11 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 152ஆவது  வருட நிறைவை முன்னிட்டு, சேவைதிறன் பாராட்டு விழா,  மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (10) நடைபெற்றது.

மட்டக்களப்பு, பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களின்  சேவைத் திறனை பாராட்டும் வகையில், மட்டு. மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மென்டிஸ் ஒழுங்கமைப்பில்,  கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்.எஸ்.கபில ஜயசேகர  தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மட்டு. மாவட்ட செயலாளர்  எம்.உதயகுமார், அதிதிகளாக போக்குவரத்து திணைக்கள முகாமையாளர் எ.எல்.எம்.பாறுக் , வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், வர்த்தகர் சங்க தலைவர்  செல்வராஜா, பொலிஸ் சமூக பாதுகாப்பு குழுத் தலைவர் ஸ்டீபன் ராஜன், அம்பாறை  மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரிகள், மட்டு. மாவட்ட பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள்  உட்பட பலரும் கலந்துகொண்டனர் .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .