வா.கிருஸ்ணா / 2018 மார்ச் 28 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடமும், 'எங்கள் ஆசான்' அரங்கியல் கலை பீடமும் இணைந்து நடத்திய, உலக நாடக தின நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் உயர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூட ஸ்தாபகர் பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் வலய கல்வி அதிகாரிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலை ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
பாடசாலை மாணவர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் தேவையற்ற விடயங்களுக்குள்ளும் உள்வாங்கப்படும் நிலையில், இவ்வாறான ஆற்றுப்படுத்தகைகளை பாடசாலை மட்டத்தில் ஏற்படுத்தி, ஒரு திருப்புமுனையினை ஏற்படுத்திவருவதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தி நிற்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிகழ்வில் நாடக ஆற்றுகைகளும் பாடல்களும் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago