Freelancer / 2023 ஜூன் 19 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கால்நடை மேய்ச்சல் பகுதியில் கன்று வயிற்றிலுள்ள பசு மாடு ஒன்று இறைச்சிக்காக அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இந்த மேச்சல் தரை பகுதி ஊடாக மாகாவலி திட்டம் செயற்பட்டுவருவதால் மேய்ச்சல் தரை காணியை சிங்களவர்கள் அத்துமீறி அபகரித்துவரும் சர்ச்சை தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.
இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த பகுதிகளில் மேச்சல் தரையில் இருந்து கால்நடைகளை அகற்றுவதற்காக காணி அபகரிப்பில் ஈடுபட்டுவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு மேய்ச்சலில் ஈடுபட்டுவரும் மாடுகளை இறைச்சிக்காக துப்பாக்கியால் சுட்டும், அறுத்தும் கொண்டு செல்லும் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
இவ்வாறான நிலையில் நேற்றைய தினம் காணாமல் போன பசுமாட்டை கால்நடை உரிமையாளர் தேடிச் சென்ற நிலையில், மகாவலி கால்நிலையத்துக்கு அருகில் சுமாட்டை இறைச்சிக்காக வெட்டி அறுத்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
அதேவேளை தேசிய பால் உற்பத்தியில் அதிகமான பங்குகளை வழங்கிவரும் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். இருந்தபோதும் இந்த செயற்பாடானது கால்நடைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்டுபிடித்து சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் ஜனாதிபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். R
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago