Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
2019 உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் கடும் சேதத்துக்குள்ளான மட்டக்களப்பு, சியோன் தேவாலாயத்தின் கட்டுமானப் பணிகள், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், தற்போது அதன் மீள் கட்டுமானப் பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பின்னனியை, அமெரிக்க உயர்ஸ்தானிகர் குழுவினர், மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு கேட்டறிந்து கொண்டனர்.
அமெரிக்கா உயர்ஸ்தானிக அரசியல் உயர் அதிகாரி அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும், தேவாலயத்துக்கு நேற்று (31) மாலை வருகைவந்தனர்.
சியோன் தேவாலயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில், தேவாலய பிரதான போதகரின் மனைவி திருமதி ரொசான் மகேசன், உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்தார்.
அமெரிக்க பிரதிநிதி, சம்பவம் இடம்பெற்ற இடத்தையும், அதன் பின்னணியியையும் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் பற்றியும் அவர்களது குடும்ப நிலை பற்றியும் கேட்டறிந்தகொண்டார்.
அத்துடன், கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மீள் கட்டுமான பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பின்னனியையும் கேட்டறிந்தார்.
மேலும், தாக்கப்பட்ட ஏனைய தேவாலயங்களின் புனரமைப்புக்கள் முடிவடைந்த நிலையில், இதன் பணிகள் இடைநடுவில் நிற்பதையொட்டி தனது கவலையை தெரிவித்ததோடு, இனி வரும் காலங்களில் தம்மாலான முழு உதவியினையும் வழங்கவுள்ளதாகவும் அமெரிக்கா உயர்ஸ்தானிக அரசியல் உயர் அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
27 minute ago
41 minute ago