2025 மே 08, வியாழக்கிழமை

சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

கனகராசா சரவணன்   / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குள், ஹெரோய்ன் போதைப்பொருளைக் கொண்டுசெல்ல முற்பட்ட பொலன்னறுவையைச் சேந்த 34  வயதுடைய சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை, நேற்று (23) இரவு கைதுசெய்துள்ளதாக, மட்டக்களப்புத் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடமைபுரியும் மேற்படி உத்தியோகத்தர், அம்பாறை -அக்கரைப்பற்று நீதிமன்றத்துக்கு சிறைக் கைதிகளை பஸ்ஸில் அழைத்துச் சென்று, பின்னர் சிறைச்சாலைக்குள் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், வெளியில் சென்று  சிறைச்சாலைக்குத் திரும்பியுள்ள உத்தியோகத்தர்களை, சிறைச்சாலை அதிகாரி, இரவு சோதனை மேற்கொண்ட போது, அதில் ஒருவரிடம் 35 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதையடுத்து, குறித்த நபரைக் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X