Freelancer / 2023 ஜனவரி 01 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 180க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்திருக்கிறார்கள் என மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.
இதற்கான விழிப்புணர்வுகள் மாவட்டத்தின் எந்தவொரு கிராம மற்றும் நகர மட்டத்தில் நடைபெறாமலிருந்தது உண்மையில் கவலையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதனுக்கு மனதில் ஏற்படும் விரக்தி, பயம், மனச்சோர்வு, கவலை எல்லாம் சேர்ந்து அவனை அழுத்துவதால்தான் தற்கொலைக்கு தூண்டப்படுகிறான்.
தற்கொலை என்ற ஒரு நிமிட எண்ணம் உடனே வருவதில்லை. பிரச்சினைகளை எப்படி கையாளுவது என்று தெரியாமல் குழம்பும் போது யாரும் அரவணைக்க தோள் கொடுக்க இல்லாமல் தனிமையில் வாடும் சமயத்தில் இம் மாதிரியான முடிவை நோக்கி மக்கள் செல்கின்றனர்.
நாளுக்கு நாள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்வதால் அதைத் தடுக்கும் முயற்சியில் நாம் இறங்கவில்லையென்றால் மாவட்டத்தின் நிலைமை என்னாவது??
அரச, அரச சார்பற்ற உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இது தொடர்பாக கலந்தாலோசித்து தற்கொலை முயற்சியிலிருந்து மக்களை பாதுகாக்க வழிகோலுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார். R
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
1 hours ago