2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சு.ப.தமிழ்ச் செல்வனின் 10வது ஆண்டு நினைவு தினம்

Editorial   / 2017 நவம்பர் 03 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள்அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வனின் 10வது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று(02) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின வைபவத்தில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிராந்திய அமைப்பாளர்கள் மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 இதன் போது சு.ப.தமிழ்ச் செல்வனின் புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் சுடரேற்றப்பட்டு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X