2025 ஜூலை 21, திங்கட்கிழமை

சேவைக்கால நிறைவையொட்டி சந்திப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கத் தூதரகத்தின் இலங்கைக்கான சிவில் ஒத்துழைப்புக்குழுவின் பணிப்பாளராகக் கடமையாற்றி, தனது சேவைக்காலத்தை நிறைவுசெய்து செல்லும் கெப்டன் ரொபர்ட் ஹோல்புரூக், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை, புதன்கிழமை  சந்தித்திதார்.

கிழக்கின் பல்வேறு பாடசாலைக் கட்டடங்களின் நிர்மாணம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்காக, கிழக்கு முதலமைச்சர் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்,

இச்சந்திப்பில், கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஆலோசகர் டைட்டஸ் ஜயவர்த்தன மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் உப தலைவர் சர்ஜூன் அபூபக்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .