Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், எம்.எஸ்.எம். ஹனீபா
படைப்புழுத் தாக்கத்திலிருந்து சோளப் பயிர்ச் செய்கையை பாதுகாப்பாக மேற்கொள்வது தொடர்பாகத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கையை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் விவசாயத் திணைக்களம் முன்னெடுத்து வருகிறது.
மட்டக்களப்பு, கரடியனாறு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டில், படைப்புழுத் தாக்கத்திலிருந்து சோளப் பயிர்களைப் பாதுகாக்கும் முறைகள் தொடர்பான அறிவூட்டும் நிகழ்வு, கரடியனாறு பல்தேவை மண்டபத்தில் இன்று (28) நடைபெற்றது.
சோளப் பயிரைப் பாதிக்கும் அந்நிய ஆக்கிரமிப்புப் பீடையை இனங்காணுதல், பீடையால் ஏற்படும் தாக்கங்கள், கட்டுப்படுத்தல் முறைகள் தொடர்பாக விவசாயிகளுக்குத் தெளிவூட்டப்பட்டதுடன், துண்டுப்பிரசுரங்களும் இதன்போது விநியோகிக்கப்பட்டன.
அதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ. சனீர் தெரிவித்தார்.
விவசாய போதனாசிரியர்கள், விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்களாக, பிரதேச செயலக ரீதியாக விவசாயச் செயலணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, படைப்புழு தொடர்பாக, சோளச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று விவசாயிகள் மத்தியில் படைப்புழுவின் தாக்கம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் இத் தாக்கம் பரவாமல் தடுப்பதற்குரிய விழிப்புணர்வூட்டும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் என்பன விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
சோளச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்த பீடை நாசினி முறையினூடாகவும், இயற்கைப் பசளையைப் பாவிக்க வேண்டுமெனவும், மண் வளத்தை அதிகரிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த வருடம் செய்கை பண்ணப்பட்ட 15 ஆயிரம் ஏக்கர் சோளம், படைப்புழுவால் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago