Niroshini / 2017 ஜனவரி 07 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
சந்தேக நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்திலிருந்து நான்கு ஸ்மாட் அலைபேசிகள் மற்றும் 4 சைக்கிள்கள் என்பன நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நோயாளிகளின் விடுதியிலிருந்து ஒரு அலைபேசி களவாடப்பட்டமை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், ஏறாவூரைச் சேர்ந்த சந்தேக நபர் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை மூலம் வைத்தியசாலையில் களவாடப்பட்ட அலைபேசி உப்பட மேலும் இரு அலைபேசிகளும் 4 சைக்கிள்களும் மீட்கப்பட்டன.
பொலிஸாரினால் மீட்கப்பட்ட சைக்கிள்களை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களைக் காண்பித்து பெற்றுக்
கொள்ளலாம் என குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்திக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago