2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சிசு விற்பனை; மூவருக்கு சரீரப்பிணை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 04 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எம்.அஹமட் அனாம்.

ஆண் சிசுவை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (03) கைதுசெய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரையும் தலா ஒரு இலட்சம்  ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்வதற்கு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எல்.எம்.முனாஸ் அனுமதியளித்தார்.

மேலும், எதிர்வரும் திங்கட்கிழமை அடுத்த வழக்குத் தவணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்தாகவும் அன்றையதினம் சந்தேக நபர்களை ஆஜராகுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பிறந்து 29 நாட்;களேயான ஆண் சிசுவை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிக் கிராமத்தில் வாழைச்சேனை பொலிஸாரால் இந்தச் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

சிசுவின்; தாய், சிசுவை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்படடனர்.
20,000 ரூபாய்க்கு குறித்த சிசுவை விற்பனை செய்ய முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .