Niroshini / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக சித்தாண்டி கிராமம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்
அந்தவகையில், சித்தாண்டி, சந்தணமடு ஆறு பெருக்கெடுத்ததன் காரணமாக சித்தாண்டி, உதயன்மூலை, முறக்கொட்டாஞ்சேனை, வந்தாறுமூலை, சந்திவெளி போன்ற கரையோர கிராமத்திலுள்ள குடியிருப்புக்களுக்குள் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளதுடன் ஆலயங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
சித்தாண்டி, சந்தணமடு ஆறு பெருக்கெடுத்தமையினால் ஈரளக்குளம், வேரம், பெருமாவெளி, இலுக்குப் பொத்தானை, மற்றும் மயிலவட்டவான் போன்ற பகுதிகளுக்கு செல்லும் தரை வழிப்பாதை தடைப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தொடர் அடை மழை காரணமாக வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேச வீதிகளில் நீர் நிரம்பி வழிவதுடன் மழை நீரை வெளியேற்ற பாதைகள் வெட்டப்பட்டு குன்றும் குழியுமாக காணப்படுகின்றன.
இதன் காரணமாக பாதைகளில் பயணிப்போர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
29 minute ago
36 minute ago
55 minute ago