Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மகிழ்ச்சியான குடும்பத்தை நோக்கி எனும் பயிற்சி செயலமர்வில் இதுவரை 120 பெண்கள் பயிற்சியை முடித்துள்ளதாக காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா மகளிருக்கான அரபுக்கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.சி.எம்.றிஸ்வான் மதனீ தெரிவித்தார்.
காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா எனும் மகளிருக்கான அரபுக்கல்லூரி நிர்வாகம் நேற்றிரவு (10) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் 'காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா எனும் மகளிருக்கான அரபுக்கல்லூரி ஏற்பாட்டில் மகிழ்ச்சியான குடும்பத்தை நோக்கி எனும் பயிற்சி செயலமர்வினை நடாத்தி வருகின்றோம்.
பிரச்சினை இல்லாமல் கணவன், மனைவிக்கு இடையிலே மகிழ்ச்சியாக தமது குடும்ப வாழ்க்கையை கொண்டு செல்லும் பொருட்டு இந்த பயிற்சி செயலமர்வு நடை பெறுகின்றது.
ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த குடும்பத்தினை மகிழ்ச்சியாக கொண்டு செல்வதற்கு தேவையான விடயங்கள் இந்த பயிற்சி செயலமர்வின்போது கற்பிக்கப்படுகின்றன.
மூன்று மாதங்களைக் கொண்ட இந்த பயிற்சி செயலமர்வு வாரத்தில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இருதினங்களிலும் காலை 8 மணியிலிருந்து காலை 10 மணி வரை நடைபெற்று வருகின்றது.
இதில் உளவில், சட்டம், பெண்களுக்கான நோய், சமையல், இஸ்லாமிய மார்க்க சட்ட ஒழுங்கமைப்பு, கனவன் மனைவியிடையேயான புரிந்துனர்வு, முதலுதவி போன்ற பல்வேறு பாடத்திட்டங்கள் இங்கு மேற் கொள்ளப்படுகின்றன.
இதுவரைக்கும் இந்த பயிற்சி செயலமர்வில் மூன்று தொகுதி செயலமர்வுகள் நடாத்தப்பட்டு 120 பெண்கள் செயலமர்வினை முடித்துள்ளனர்.
தற்போது 4வது தொகுதியினருக்கான பயிற்சி செயலமர்வு இடம் பெற்று வருகின்றது. இந்த தொகுதியிலும் 40 பெண்கள் உள்ளனர்.
எமது காத்தான்குடி மஹதுஸ்ஸுன்னா அந் நபவிய்யா மகளிருக்கான அரபுக்கல்லூரியானது 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது' என்றார்.
3 minute ago
9 minute ago
38 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
9 minute ago
38 minute ago
40 minute ago