Princiya Dixci / 2016 மே 25 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில் சிறுமியொருவருக்குச் சூடு வைத்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறுமியின் தந்தை மற்றும் தந்தையின் இரண்டாவது மனைவி ஆகிய இருவருக்கும், நேற்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட போதிலும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு எவரும் சரீரப்பிணை நிற்பதற்கு முன்வராததால் அவர் மீண்டும் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டதாக மட்டக்களப்பு சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாய்ஆகிய இருவருக்கும், தலா ஒருவருக்கு 25,000 ரூபாய் பணமும் தலா ஒருவருக்கு நான்கு பேர் கொண்ட சரீரப் பிணையிலும் செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
இவர்களின் நான்கு சரீரப் பிணையில் இருவர் அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டுமெனவும் இவ்விரு சந்தேகநபர்களையும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையொப்பிமிட வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து சிறுமியின் தந்தை, பிணையில் விடுதலையான போதிலும் சிறுமிக்குச் சூடு வைக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் வளர்ப்புத்தாய்க்கு பிணை நிற்பதற்கு எவரும் முன்வராததால் மீண்டும் நீதிமன்றத்திலிருந்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்தும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி இருவரும், கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
25 minute ago
45 minute ago