2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

செல்வாநகர் கைகலப்புச் சம்பவம் தொடர்பில் அறுவர் கைது

Suganthini Ratnam   / 2017 மார்ச் 21 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி, செல்வாநகர் கிழக்குக் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற கைகலப்புச் சம்பவம் தொடர்பில் 6 பேர் இன்று (2) கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி கிராமத்தில்; மரண வீடு ஒன்றிலேயே இந்தக் கைகலப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக்குத்து மற்றும் தடியால் தாக்கியதில் கர்ப்பிணி ஒருவர் உட்பட 2 பெண்களும் 7 ஆண்களுமாக 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காணிப் பிணக்கு காரணமாகவே குடும்பம் ஒன்றுக்குள் இந்தக் கைகலப்பு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 5 பேர் கைகலப்பில் காயமடைந்தவர்கள் என்பதுடன்,  இவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் கூறினர்.

காயமடைந்தவர்களில் 7 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை, 2 பேர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .