2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஜனாதிபதியின் மட்டு. விஜயம்; ஏற்பாடுகள் பூர்த்தி

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதன்போது,நாளை செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு செல்லும் ஜனாதிபதி அங்கு நடைபெறும் சமய நிகழ்வில் பங்குபற்றுவார்.

இதனையடுத்து, மட்டக்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்துக்கும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலுக்கும் மட்டக்களப்பு புனித மரியாள் தேவலாயத்துக்கும் ஜனாதிபதி சென்று அங்கு நடைபெறும் பிரார்த்தனை மற்றும் சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது பருவகால அடைமழை பெய்ய தொடங்கியிருப்பதால் ஜனாதிபதியின் விஜயம் திட்டமிட்டபடி இடம்பெறுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளதாக பரவலாகப் பேசப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X