2025 மே 15, வியாழக்கிழமை

டெங்கு காய்ச்சலால் எழுவர் பலி; 4,170 பேர் பாதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பத்து மாதங்களில், மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,170 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்றும், மாவட்ட தொற்றுநோய்த் தடுப்பு நிபுணர் டொக்டர் எஸ்.தர்சினி தெரிவித்தார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதியிலேயே, இத்தொகையிலானோர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.

“மட்டக்களப்பு மாவட்டத்தில், தொடர்ந்து சுகாதாரப் பகுதியினரால் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருவதால், டெங்குத் தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

“கடந்த மே மாதத்தின் பின்னர் டெங்கு காரணமாக இம்மாவட்டத்தில் ஒரு மரணமும் ஏற்படவில்லை. இருப்பினும், பருவமழை ஆரம்பமாகும்போது, டெங்குத் தொற்று தீவிரமாகப் பரவ வாய்ப்புள்ளது” எனவும் மாவட்ட தொற்றுநோய்த் தடுப்பு நிபுணர் தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம், 50 டெங்கு நோயாளர்களே, டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .