2025 மே 09, வெள்ளிக்கிழமை

டெங்கு பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்த குழு உருவாக்கம்

எம்.எம்.அஹமட் அனாம்   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்டத்தில், “டெங்கு நுளப்பு பெருகும் இடங்களைக் கட்டுப்படுத்தி, உயிரைக் காப்போம்” எனும் தொனிப்பொருளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள 09 கிராம சேகவர் பிரிவுகளில் கிராமிய டெங்கு விழிப்புணர்வுக் குழு உருவாக்கும் நிகழ்வு, கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.ரி.நஜீப்கான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்கோர் நிறுவன திட்ட உத்தியோகத்தர் ஏ.செல்வக்குமார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 09 கிராம சேகவர் பிரிவுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட கிராமிய டெங்கு விழிப்புணர்வுக் குழு உறுப்பினர்களுக்கு, சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X