Editorial / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}


கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 09 சீ பிரிவை சேர்ந்த மாணவர்களான என்.எம் சப்ரின், கே. கைப் சக்கி, ஏ.எம்.எம் அஸ்ஜத் ஆகிய மூன்று மாணவர்களும், இரண்டு இலட்சத்து எண்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க கைப்பட்டியைக் கல்லூரி வளாகத்தில் கண்டெடுத்து, கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைத்த சம்பவம், செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றது.
இந்த மூன்று மாணவர்களும், தாம் கண்டெடுத்த கைப்பட்டி தொடர்பாக உரையாடி, தரம் 09 பகுதித் தலைவர் எம்.எஸ்.ஏ சிராஜ் ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இம்மாணவர்களது நன்நெறி மிக்க முன்மாதிரி நடத்தையைப் கல்லூரி அதிபர் எம்.ஐ ஜாபிர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் பாராட்டியதுடன், காலைக் கூட்டத்தில், குறித்த ஆசிரியையிடம் தங்க நகையும் ஒப்படைக்கப்பட்டது.
25 minute ago
39 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
4 hours ago
4 hours ago