2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தங்களை சிலர் அச்சுறுத்துவதாக மட்டு. வேலையற்ற பட்டதாரிகள் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களுக்கு சிலர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள், திங்கட்கிழமை (17) முறைப்பாடு செய்துள்ளனர்.

இரவு வேளைகளில் சிலர் வந்து தங்களை அச்சுறுத்துவதாகவும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாகாண அரசாங்கங்கள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி பூங்காவுக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .