2025 மே 08, வியாழக்கிழமை

தஜ்வீத் கலாசாலை வீதி புனரமைப்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2015 இளைஞர் நாடாளுமன்றத்துக்கு இணையாக 'துருனு சிரம சக்தி' தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1 ஒரு இலட்சம் ரூபாய் செலவில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-02 166ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவிலுள்ள தஜ்வீத் கலாசாலை வீதியின் 4ஆம் குறுக்கு உள்ளக வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

மேற்படி வீதியை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் ஜெ.சர்வேஸ்வரன்,காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சீ.அஹமட் அப்கர் ,காத்தான்குடி பிரதேச கிராம சேவகர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.கோமலேஸ்வரன்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ.எம்.சில்மி,166 பிரிவுக்கான கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. அஸீஸா, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.எல்.எம்.நியாஸ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகள் 15 தினங்களுக்குள் பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X