2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தடுத்துவைக்கப்பட்ட நபர் விடுதலை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பேரின்பராஜா சபேஷ்
 
கடந்த 7 வருடங்களாக சட்ட மா அதிபர் திணைக்களத்தி;டமிருந்து அறிவுறுத்தல் பெறப்படாதிருந்த கொலை வழக்கொன்றில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவர், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய நேற்று செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
 
2009ஆம் ஆண்டிலிருந்து கொலைக் குற்றச்சாட்டு வழக்கொன்றில் குறித்த நபர் சந்தேகததின் பேரில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
 
மேற்குறித்த வழக்கிளை விரைவுபடுத்தி சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
 
குறித்த சதேக நபருக்கு எதிரான சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைவாகவும் இவர் நேற்று செவ்வாய்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X