Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தந்தை செலுத்திய காரில் தவறுதலாக அகப்பட்டு அன்வர் சதாத் பாத்திமா (வயது 8) என்ற சிறுமி மரணமடைந்த சம்பவம், கல்முனைக்குடியில் சனிக்கிழமை (10) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த தந்தையை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
குடும்பத்தினருடன் பயணம் செய்துவிட்டு வீட்டுக்கு வந்து கராஜில் நிறுத்துவதற்காக தந்தை காரைச் செலுத்தியபோது, ஏற்கெனவே அந்தக் காரிலிருந்து இறங்கி நின்ற இந்தச் சிறுமி நசுங்குண்டுள்ளார்
இந்தச் சிறுமியை காப்பாற்றுவதற்குச் சென்ற தாய் றொசானா சதாத் (வயது 38) காருக்கும் சுவருக்கும் இடையில் அகப்பட்டு காயமடைந்ததைத் தொடர்ந்து கல்முனை அஷ்ரப் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
44 minute ago
1 hours ago
2 hours ago