Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 16 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாதென கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தை விட்டு வெளியில் வரும் போது அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், '2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்தினுள் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும். இருந்தபோதிலும், இக்கொலைச் சம்பவத்துக்கும் எனக்கும் எனது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லையென்பதை கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக, கிறிஸ்தவ மக்கள் நன்கறிவார்கள். கிழக்கு மண்ணையும் மக்களையும் நேசிக்கும் நான் நிரபராதியாக வெளியில் வருவேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago