2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

தமிழாசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஜூலை 01 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சங்கத்தின் உபதலைவர் ஏ. பிரியகாந்தன் தலமையில் இன்று (01) இடம்பெற்றது.

இதன்போது இடம்பெற்ற புதிய நிர்வாகத் தெரிவின்போது, சங்கத்தின் பொதுச் செயலாளராக மீண்டும் சிவக்கொழுந்து ஜெயராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு, தலைவராக ஏ. பிரியகாந்தன் (மட்டக்களப்பு) உப தலைவராக வி. தியாகராஜா (அம்பாறை) உப செயலாளராக ஜே. மோகன்ராஜ் (திருகோணமலை) பிரசாரச் செயலாளராக என். கிட்ணதாஸ் (மூதூர்) நிர்வாகச் செயலாளராக சி. சங்கர் (திருகோணமலை) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகிய மாட்டக் கிளைகளுக்கான நிர்வாகமும் இங்கு தெரிவு செய்யப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X