2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

‘தமிழ்த் தமைமைகள் ஒருமித்த குரலில் செயற்பட வேண்டும்’

வ.துசாந்தன்   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ்த் தலைமைகள், ஒருமித்த குரலில் செயற்பட்டால், நமது உரிமைகளைப் பெறுவதற்குப் பலமாக இருக்குமென, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

சமகால அரசியல் தொடர்பாக இன்று (15) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

“பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டும் தமிழ்த் தலைமைகளை, பேரினவாதத் தலைவர்கள் காலைவாரிவிட்ட சந்தர்ப்பங்களே தமிழ் மக்களின் வரலாற்றில் உள்ளன.

“ஆனால், தற்போதுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் இருவருக்கிடையேயும் ஏற்பட்டுள்ள ஒப்பந்தம், தமிழ் மக்களின் உரிமையைப் பெறுவதற்கான சிறந்த வழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.

“இந்த நல்லாட்சியிலும், தமிழர்களுக்கென்று மீளப்பெற முடியாத நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவில்லை என்றால், இனி ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை.

“அரசியலில் சிறந்த அனுபவமும் சாணக்கியமும் கொண்ட தந்தை செல்வாவின் வழியில் சென்று கொண்டிக்கும் சம்பந்தன் ஐயா உள்ளிட்ட சில தலைமைகள், தமிழ்த் தரப்பு பற்றிய பல விடயங்களில் மிகவும் உன்னிப்பாகவும் நுணுக்கமாகவும் ஒவ்வொரு அடியையும் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.

“இதனைக் குழப்பும் முயற்சியில் இன்னுமொரு தரப்பு முயல்வது, தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஒப்பாகவுள்ளது.

“தமிழ்த் தலைவர்கள் விடுகின்ற அறிக்கைகளானது, அரசியல் சாசனத் தீர்வுத் திட்ட விடயத்தைக் குழப்பாமல், தமிழர்களுக்கென்று மீளப்பெற முடியாத நிரந்தர தீர்வைப் பெறுவதற்கு வழிவகுக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .