Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
கனகராசா சரவணன் / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
“தமிழ்த் தலைமைகள் ஒரு குழப்பகரமான நிலையிலிருப்பதால் இவர்களைத்தான் ஆதரிக்க வேண்டுமென இற்றைவரை உறுதியாகக் கூறாது மௌனம் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள்” என, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சட்டத்தரணி த.சிவநாதன் தெரிவித்தார்.
கல்லடி, கிறீன் கார்டன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளால் வென்றவர்கள் கையை விரித்ததனால், நாங்கள் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டோமென, சிறுபிள்ளைத்தனமாக கூறுவதெல்லாம் தலைமைத்துவமின்மையைக் காட்டுகின்றது” என்றார்.
“தமிழ் மக்கள், உரிமை ஆணை கொடுத்து நாடாளுமன்றம் அனுப்பியும் இற்றைவரை எதையும் செய்ய முடியாமைக்கு, நியாயமான காரணங்கள் இன்றி, தமிழ் மக்களிடம் எவ்வாறு முகங்கொடுப்பது என்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இருந்து வருகின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “எங்களுடைய உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால் தெற்கு சிங்கள மக்கள் மத்தியிலே எங்களது நியாயமான பிரச்சினைகள் விளங்கப்படுத்தப்பட்டு, அவர்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும்” எனக் கூறிய அவர், தமிழ் மக்களுக்கு என்ன நன்மையான விடயங்கள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் வாக்களிப்புக்கு முன்னதாக பேசி பெற்றுக்கொண்டு, தகுதியான வேட்பாளரைத் தெரிவுசெய்வது புத்திசாலித்தனமானது” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago