2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ​ஆதரவாக உண்ணாவிரதம்

Editorial   / 2022 செப்டெம்பர் 16 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் இன்றைய தினம் (16) அடையாள உண்ணாவிரதம்  முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்திப் பூங்கா அருகில் நடைபெற்ற இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .