2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களுக்கான கோரிக்கைகளுக்கு ‘ஜே.வி.பி ஆதரவு வழங்க வேண்டும்’

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 03 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் நலன்சார்ந்து, நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆதரவு வழங்கவேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்திக்கும் வியாழேந்திரன் எம்.பிக்கும் இடையிலான சந்திப்பு, மட்டக்களப்பில் நேற்று (02) மாலை இடம்பெற்றது.

மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்ற இச்சந்திப்பில், ஜே.வி.பியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் க.பிரபு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டம் தொடர்பிலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அப்பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும்போது, அதற்கு ஜே.வி.பி.ஆதரவு வழங்கவேண்டும் என, இதன்போது வியாழேந்திரன் எம்.பி வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து, தமிழ் மக்கள் நலன்சார்ந்து கொண்டுவரும் முன்மொழிவுகளுக்கு ஜே.வி.பி.ஆதரவு வழங்குமென, சுனில் ஹந்துன்நெத்தி எம்.பி இதன்போது உறுதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .