Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 16 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மட்டக்களப்பு, செட்டிபாளையம் சிவன் கோவில்;; திருவருள் சங்கத் தலைவர் சீ.நாகலிங்கமும் செயலாளர் எம்.புவிதரனும் ஒப்பமிட்டு கருணைமனுவை ஞாயிற்றுக்கிழமை (15) அனுப்பியுள்ளனர்.
அம்மனுவில், 'விடுதலையை வலியுறுத்தி சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் சமகால சூழ்நிலை தொடர்பில் எமது சமூகம் கவலையடைகின்றது. தங்களின் நல்லாட்சியின் கீழ் இன நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சூழலில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டிய தேவை உணரப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள்.
எனவே, தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதத்தைக் கருத்திற்கொண்டு, அவர்களின் கோரிக்கையை பரிசீலித்து பொதுமன்னிப்பின் அடிப்படையில்; அவர்களை விடுதலை செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago