2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மக்கள் பேரவையுடன் 3 கட்சிகள் இணைவு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 17 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்புடன் தற்போது 3 அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன என அப்பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்புப் பிரதிநிதி ரீ.வசந்தராஜா, இன்று (17)  தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புகளும் பலரும் வந்து இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனை தலைமையாகக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் சித்தார்த்தனை தலைமையாகக் கொண்ட புளொட் கட்சியும் கஜேந்திரகுமாரைத் தலைவராகக் கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்துள்ளன எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது,  'ஒரே அணியில் நாம் இணைந்து செயற்படுவதன் நோக்கமானது வடக்கும் கிழக்கும் இணைந்த சமஷ்டி ரீதியான தீர்வைப்; பெற வேண்டும். அத்தீர்வின் ஊடாக தமிழ் பேசும் சமூகங்கள் இந்நாட்டில்  நிம்மதியாக வாழ வேண்டும் என்பதேயாகும்.

மேலும், கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்கள் பிரிந்து நிற்பதை விட, இணைந்து   வாழ்வதே சிறந்ததாகும்.

ஆகவே, இந்த இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகம் என்ற ரீதியில் இணைந்து கிழக்கு மாகாணத்திலிருந்து பிரகடனம் செய்வதற்கான சந்தர்ப்பமாக எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் பேரணியை எதிர்பார்த்துச்  செயற்பட்டு வருகின்றோம்.

அரசியல் கட்சி வேறுபாடோ மற்றும் தமிழர், முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடோ இன்றி இந்நிகழ்வுகளில் அனைவரும் பங்குபற்ற முடியும் என்று அழைப்பு விடுக்கின்றோம்;' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X